வடமராட்சி கல்வி வலயப்பாடசாலைகளின் மாணவர்களுக்கான சீருடைத்துணிகளை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் கீழ்க் குறிப்பிடக்கடும் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என வலயக் கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
சீருடைத்துணிகள் விநியோகிப்பதற்குத் வடமராட்சி பிரதேசத்தில் 8 வர்த்தக நிலையங்கள் வலயத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான சீருடைத்துணிகளுக்கான கூப்பன்கள் இன்று பாடசாலைகளில் வைத்து அதிபர்களால் வழங்கங்கப்பட்டன. இதில் ஆரம்பப்pரிவு மாணவர்களுக்கான வழங்கப்பட்டன.தற்போது வழங்கப்பட்ட கூப்பனுக்குரிய சீருடைத்துணிகளை பெற்றோர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பின்வரும் வர்த்தக நிலையங்களில் பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நியூ வரதமகள் புடைவையகம், பருத்தித்துறை சரவணாஸ் ரெக்ஸ்,நெல்லியடியிலுள்ள ஜெயாஸ் ரெக்ஸ்,செல்வமுத்தூஸ் ரெக்ஸ்ரைல்ஸ்,யசோ ரெக்ஸ்,நெல்லை சில்க்ஸ் மற்றும் கப்பி ரெக்ஸ் ஆகிய வர்த்தக நிலையங்களிலும் மருதங்கேணி லக்ஸ்மி புடவையகத்திலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.