சிவகுரு வித்தியாசாலையில் இருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு இந்த வருடம் 14 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் மு.வினுசியன் (163 புள்ளிகள்) டீ.தனுஷன் (162 புள்ளிகள்) ஆகிய இருமாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். மற்றைய 10 மாணவர்களும் சிறந்த முறையில் பரீட்சை எழுதி 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளனர். அனைவருக்கும் valvainews.org இணையத்தளத்தின் வாழ்த்துக்கள் மற்றைய வல்வை பாடசாலைகளில் இருந்து சித்தியடைந்த மாணவர் விபரங்கள் விரைவில் எமது இணையத்தளத்தில் தரவேற்றப்படும்
வல்வையில் இருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் தை பொங்கல் தினத்தில் உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறும் வல்வை பட்டத் திருவிழாவின் போது பல்லாயிரம் மக்கள் முள்னிலையில் பரிசில்கள் வழங்கி கௌரவித்தல் வழமையாகும்
கடந்த வருடம் மாணவர்களுக்கான பரிசில்களை மரியாதைக்குரிய வடமாகாணசபை முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








