வல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரும் 30.05.2016 அன்று ( வங்கி விடுமுறை) நடைபெற இருக்கின்றது. இப்போட்டியில் 35 கழகங்கள் விளையாடவுள்ளன மற்றும் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டமும் நடைபெற இருக்கின்றது
பெரும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கப்படும் இம் மாபெரும் கிரிக்கெட் போட்டி அன்று எம் தாயக உணவகம் கூழ், கொத்துரொட்டி ,கோழிப்புக்கை ,ரோல் ,வடை என்பன சுடச், சுட வழங்க உள்ளனர்.அனைவரையும் வருகை தந்து இக் கிரிக்கெட் பெருவிழாவை கண்டு களிக்குமாறு அழைக்கின்றனர் .