பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியில் வல்வை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

0
680 views

 

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவு செய்த கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கெருடாவில் அண்ணா விளையாட்டுக்கழகமும் பெண்கள் பிரிவில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகமும் இவ்வருடச் சம்பியனாகியது.இச்சுற்றுப் போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் மாதனை விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றன.

முதலில் இடம்பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக் கழகமும் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகமும் மோதின.மூன்று செற்களைக்கொண்ட இப்போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது சென்தோமஸ் விளையாட்டுக்கழகம்.
அடுத்து இடம்பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கெருடாவில் அண்ணா விளையாட்டுக்கழகமும் வல்வை விளையாட்டுக்கழகமும் மோதின.
5செற்களைக்கொண்ட இச்சுற்றுப் போட்டியில் 3:0 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று சம்பினாகியது கெருடாவில் அண்ணா விளையாட்டுக் கழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here