பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டியில் 20 வயது பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் வட மாகாணத்தின் தங்கப் பதக்க கனவு தகர்ந்த போதும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப்போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. அதில்நேற்று இடம்பெற்ற 20வயது பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தைப் பெற்றார் நீர்கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த இஷா உடானி சில்வா . இதில் அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த வி.சாத்வீகா 3 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.









