வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் வல்வெட்டித்துறைப் பிரதேச அணிகளுக்கிடையில் நடத்தும் கால்ப்பந்தாட்டத் தொடர் வல்வை றெயின்போய்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை ரேவடி விளையாட்டக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் முதல் பதின்ம நிமிடங்கள் வரை இரு அணியினராலும் இலகுவில் கோல்களைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை.இந்நிiலியில் ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் சைனிங்ஸ் அணியின் முன்கள வீரர் குமரன் தமது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுக்க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.இடைவேளை வரை மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில் 1:0 என ஆட்டம் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.
இடைவேளையின் பின் ஆட்டம் ஆரம்பமாகியதும் பதில் கோல் போட்டு ஆட்டத்தை சமனிலையில் முடிப்பதற்கு ரேவடி அணியினர் கங்கணங் கட்டிக்கொண்டு ஆட்டத்தில் ஈடுபட பந்து அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் பெரும்பகுதி அந்நிலைமையே காணபப்பட சைனிங்ஸ் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட சூழ் நிலையில் ஆட்டம் நிறைவடைய சில மணித்துளிகள் இருக்கும் போது ரேவடி அணியின் வீரர் சஞசீவன் அசத்தலான கோல் ஒன்றைப்போட ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.
தொடர்ந்து வெற்றியாளரரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையிலும் இரு அணியினரும் மாறி மாறி கோல் போட இழுபறி நிலை காணப்பட்டது. இருந்தபோதும் இறுதியில் ரேவடி அணியின் கோல்காப்பாளரின் அதீத செயற்பாட்டினால் 5:4 என்று கோல்களை;பெற்று ரேவடி அணி வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.