மரண அறிவித்தல் கந்தசாமி இராசசுந்தரம்

0
2,900 views

மரண அறிவித்தல்

திரு. கந்தசாமி இராசசுந்தரம்
திரு. கந்தசாமி இராசசுந்தரம்  அவர்கள் 7.06.2017 இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி ,சந்திரகாந்தி அவர்களின் சிரேஸ்ட புத்திரரும் புஸ்பாதேவியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற வெங்கடாசலபிள்ளை சகுந்தலை அம்மா அவர்களின் பாசமிகு மருமகனும் சொர்ணாகாந்தி ,இரத்தினகாந்தி அவர்களின் பெறாமகனும் கங்காதரன் ,மயூரதன் ,சங்கரதரன் ஆகியோரின் தந்தையும் ஸ்ரீகௌரியின் மாமனாரும் கேதாரணி ,சஞ்சனா ,ஐஸ்வினி ஆகியோரின் பேரனும் யோகலட்சுமி அம்மா ,நாகேஸ்வரன், சூரியகுமாரி ,வசந்தகுமாரி , பரமேஸ்வரன் ,மங்களேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் கிரிதராதேவி ,காலஞ்சென்ற பிறேமம்சந்திரன் ,மீராதேவி ,தயாபரன் ,சசிதேவி, கிரிதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 8.06.2017 இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை 5மணிக்கு காட்டுப்புலம் இந்துமயானத்தில் நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்
(ஓய்வு பெற்ற மின்மானி வாசிப்பாளர்) ஐயர் வாத்தியார்

ஜயர் அண்ணா என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. இராசசுந்தரம் கந்தசாமி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னாh வாழ்வின் பெரும்பான்மை நேரத்தில் ஆண்டவன் பணிகளையே செய்து வந்தவர். வல்வை முத்துமாரி அம்மன் கோவில் மணியமாக கடமையாற்றியவர். செல்வச்சன்னதி கோவில் அடியார் மடத்தில் நீண்ட காலம் தொண்டாற்றி வந்தவர். தனது மாமனார் திரு.வெங்கடாசலம் மாஸ்டா மறைவிற்கு பின்னர் அடியார் மடத்தின் முக்கிய பொறுப்பாளராக தொண்டாற்றி வந்தவர். ஆலயங்களுக்குரிய அனைத்து நடைமுறைகளும் அறிந்த இறையடியார். அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here