உதயசூரியன் கடற்கரையில் 30000 இற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் தொலைபேசி அலைவரிசைகள் பாதிப்படைந்தன.

0
1,004 views

நேற்றைய தினம் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் வினோத (வி)சித்திர பட்டத்திருவிழா, அணை திறப்பு விழா, கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா மற்றும் மறைந்த நாயகர்களின் விருது விழங்கல் விழாவில் முதலமைச்சர் திரு.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்விற்கு மாலை 2 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்த வேளையிலே மாலை 4.30 மணி தொடக்கம் 5.45 மணி வரை உதயசூரியன் கடற்கரை பகுதியிலே தொலைபேசி அலைவரிசை பாதிக்கப்பட்டிருந்தமையை அனைவரும் காணக்கூடியதாக இருந்தது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here