பட்டப்போட்டிக்கு வருகை தரும் மக்களை சரியான முறையில் ஒழுங்கமைத்து வருகை தரும் மக்கள் அனைவரும் விரைவில் கடற்கரையை வந்தடையக்கூடிய பாதைகள், பாரிய பட்டங்கள் உள்ளே எடுத்து வரக்கூடிய பாதைகள் (சில பட்டங்கள் 22அடி நீளம் 14 அடி அகலம்), மக்கள் லண்டன் உணவகத்தில் சென்று உணவுகளை பெற்றுக்கொண்டு விரைவில் திரும்பக்கூடிய வகையிலான வழி அமைப்புக்கள், பட்டப்போட்டி நடைபெறும் இடத்திற்கு வரமுடியாதவாறான தடைகள் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் திரு.க.வி.விக்னேஸ்வரன் மக்களுடாக சென்று அணையை திறப்பதற்கான பாதைகள் என்று அனைத்து ஏற்பாடுகளும் எப்படி இருக்க வேண்டும் என்று கழக அங்கத்தவர்கள் சுமார் 60 பேருக்கு புதன் , வியாழன் தினங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
சுமார் 20 ஆயிரம் பேர் அளவிலேயே வருவார்கள் என்றே பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வருகை தந்த போதும் (சுமார் 30 ஆயிரம் மக்கள் கடற்கரை பகுதி முழுவதும் நிறைந்திருந்ததாக பத்திரிகை நிபுணர்களும், வானொலி, தொலைக்காட்சி நிபுணர்களும் தெரிவித்திருந்தனர்.)
கழகத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டாளர்கள் நிலமையை மிகச்சிறப்பாக கையாண்டு எந்தவொரு மக்களும் கூட்ட நெரிசல்களில் இடிபடாமல் பட்டப்போட்டியை கண்டு இரசித்ததோடு, இரவு நடைபெற்ற சுப்பர் சிங்கர் பாடகர்களின் நிகழ்சியையும் பார்வையிட்டு வீடு திரும்பினர்.
பாதுகாப்பு ஒழுங்கமைப்பாளர்களுக்கான உடைகள் உதயசூரியன் கழக இங்கிலாந்து நிர்வாகத்தினரால் லண்டனில் இருந்து எடுத்துவரப்பட்டிருந்தன. அத்துடன் உதயசூரியன் நிர்வாகத்தின் வேண்டுதளுக்கு இணங்க 10 இற்கு மேற்பட்ட லண்டன் வாழ் கழக அங்கத்தவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் லண்டன் உணவக வேலைத்திட்டத்திற்காக வருகை தந்திருந்தனர்.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி நிருபர்கள் இலகுவாக அனைத்த இடங்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுப்பதற்கு வசதியாக அனைவருக்கம் PRESS & PHOTO என்று அச்சிடப்பட்ட சிவப்பு பச்சைநிற மேலங்கிகள் வழங்கப்பட்டிருந்தன. நிருபர்கள் இச் சிறப்பு ஏற்பாட்டிற்காக பல முறை நன்றி தெரிவித்திருந்தனர்.
வந்த பல மக்கள் பட்டப்போட்டி, இசை நிகழ்ச்சி மட்டுமல்லாது, பாதுகாப்பு ஒழுங்கு ஏற்பாடுகளும் லண்டன் உணவகமும் தங்கள் மனங்களை கவர்ந்தன என்று கூறிச் சென்றனர்.