லன்டனில் நடந்த கழகங்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டியில் அகால மரணமடைந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவனும் மாணிப்பாய் பரிஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரனுமான பாவலன் அவர்களின் இறுதியாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19-07-2015) நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை 1ஆம் கட்டையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் யாழ்மாவட்ட கிறிக்கட் கழகங்களின் முன்னால், இன்னால் வீரர்கள், கழக உறுப்பினர்கள், பாடசாலைகளின் கிறிக்கட் அணி வீரர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பெருந்திரலானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.