வல்வை விளையாட்டுக் கழகத்தின் விசேட பொதுக்கூட்டமும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய உறுப்பினர்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (19-07-2015) மாலை 04.30 மணியளவில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வெளியிடப்ட்டு பொதுச்சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகத் தெரிவில், வல்வை விளையாட்டுக்கழகத்தின் புதிய தலைவராக ரேவடி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த நிமலன் அவர்களும், உப தலைவராக சைனிஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த நிருபன் அவர்களும், செயலாளராக றெயின்போ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரகலாதனும், பொருளாலராக நேதாஜி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் அவர்களும், உதைபந்தாட்ட அணித்தலைவராக சைனிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சுரேன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் சில பிரச்சனைகள் சுமுகமாக முடிவுகள் காணப்பட்டு மாலை 06.15 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.