வல்வை நகரசபை தலைவர் பதவி சம்பந்தமான அறிக்கை ஒரு சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் வல்வை நகரசபையின் செயற்பாடுகள் யூலை 29ம் திகதியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி க.அரியநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. ஓக்ரோபர் 28ம் திகதியுடன் சபை இடைநிறுத்த உத்தரவு முடிவடைந்து உள்ளதால் வரத்தக மானி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிபார்க்கப்படுகிறது.









