வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நோர்வே ஓஸ்லோவைவசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திருமதி சந்திரகுமார் தமயந்தி அவர்களின்முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 25/07/2023.
ஜனனம்:17/11/1976
மரணம்:04/08/2022
———————————
குணம் கனிந்த உறவாய் பூத்து
மனம் நிறைத்து நின்ற தாயின்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
——————————
எத்தனைதான் சொந்தங்கள்
எம் வாழ்வில் வந்தாலும் தாயே
உன் நேசத்துடன் கூடிய பந்தம்
என் காலம் நரைக்கும் ஆயுள் வரை
எட்டாப் பழமாக்கி விட்ட விதி !
உன் வாழ்வின் ஒரு பாதி
எனக்கான உயிர்ப்பாய்
இமைக்குள் வைத்தே தாங்கினாய்
மறு பாதி நம் குருதியீர்ந்த
மழலைகளுக்கானதாய்
ஆயுள் காலம் வரை
தாங்கி நிற்பாய் என்ற சத்திய
விருட்சத்தினை வேரோடு சாய்த்துவிட்ட கூற்றுவன் !
எமைக் காத்து நின்ற
தாயான தெய்வத்திற்கு
ஈடாய் நாம் என்ன
செய்யவதென்று தெரியாது முடமாய் நிற்கிறோம் அம்மா!
பொருள்மரபில்லா
பொய்மொழி போல்
புலரும் நாட்களின் வேகம்
நித்திரை தொலைத்த இரவுகள்!
நின் மரணம் எமக்கு
ஆறாத காயங்கள் தந்தாலும்
அறிவியலாய் உயிர்திருக்கும
உன் நினைவுகள் எழுந்து வந்து பேசுவது சற்று ஆறுதல் தானம்மா!
கணப் பொழுதும் ஆறாத ஆறாத
நினைவுகளுடன் உயிர்த்திருக்கும்
தாயவளே எம்மோடு என்றும் நீ !
ச.சந்திரகுமார் (சுந்து),பிள்ளைகள்
சந்திரகுமார் தமயந்தி 1 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு01.08.2023 அன்று செவ்வாய் ஆடிப்பூர தினத்தில் வல்வைமுத்துமாரி அம்மன் கோவிலில் அன்னதானம் மதியம் 12.00 மணிமுதல் இடம் பெறும்.
திருச்சி கல்லுக்குளி ஆஞ்சநேயர் ஆலயத்திலும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை முதல் 05.08.2023 சனிக்கிழமைவரைதொடர்ந்து 5 நாட்களுக்கு மதியம் 12.00 முதல் அன்னதானம் இடம்பெறும்.









