வல்வை விளையாட்டுக்கழகம் தனது வைரவிழாவினை முன்னிட்டும்மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்டமாபெரும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்டபோட்டியொன்றினை நடாத்தி வருகின்றது..
அந்தவகையில் அரையிறுதியாட்டங்கள் நேற்றைய தினம்(13/06/2022) ஆரம்பமாகியது. இன்றைய தினம் (14/06/2022) இடமபெற்ற இரண்டாவது அரையிறுதியாட்டத்தில்யாழ்மாவட்டத்தின் பலம் வாய்ந்த முன்னணி அணிகளான குருநகர்பாடும்மீன் அணியினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன்விளையாட்டுக்கழகம் மோதியது
பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில இடம்பெற்ற ஆட்டமானது 2:1 என்ற கோல்கணக்கில் குருநகர் பாடும்மீன் அணியானதுவெற்றியினை வெற்றி வல்வை வைரவிழா உதைபந்தாட்டதொடரின் மாபெரும் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. குருநகர்பாடும்மீன் அணிசார்பாக சாந்தன் மற்றும் கீதன் தலா ஒருகோலினை பெற்றுக்கொடுத்ததோடு மயிலங்காடு ஞானமுருகன்அணிசார்பாக பெறப்பட்ட ஒரு கோலினையும் mலஸ்ரின்பெற்றுக்கொடுத்தார்.. போட்டியின் ஆட்டநாயகனாககுருநகர்பாடும்மீன் அணியின் தினேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்ற குருநகர்பாடும்மீன் அணிக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் சிறப்பாக செயற்பட்டமயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கும்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்தெரிவித்துக்கொள்கின்றோம்.
இறுதியாட்டமானது எதிர்வரும் 18/06/2022 சனிக்கிழமை அன்றுவல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில்மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.. இவ்இறுதியாட்டத்தில் யாழின் பலம் வாய்ந்த அணிகளான குருநகர்பாடும்மீன் அணியினை எதிர்த்துகொற்றாவத்தை றேஞ்சஸ்விளையாட்டுக்கழகமானது மோதவுள்ளது…