வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி கல்வி வலயம் நடத்தும் நிறைமதி கலை விழா திங்கட்கிழமை காலை 8 மணிக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது..வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் திருமதி விஜயலட்சுமி சுகுமாரன் மற்றும் ஓய்வு பிரதிக்கல்விப்பணிப்பாளர் அ.ஶ்ரீறகரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி மாணவிகளின் காவடி நடனம் வல்வை மகளிர் கல்லூரி மாணவிகளின் கீர்த்தனம் பருத்தித்துறை காட்லிக்கல்லாரி மாணவர்களின் குழு இசை நெல்லியடி மத்திய கல்லாரி மாணவர்களின் கௌத்துவம் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களின் அரிவு வெட்டு நடனம் என்பன இடம்பெறவுள்ளதுடன் வடமராட்சி வலயத்திலிருந்து பிரதீபா பிரபா விருது பெற்ற அதிபர்கள்ஆசிரியர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.அத்துடன் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.