வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வாழ்விடமாகவும், தற்போது லண்டனில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்தம்பி கணேசபாக்கியம் அவர்கள் 100 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்கள்.
மூன்று பிள்ளைகள்,பத்து பேரப்பிள்ளைகளும்,பதின்மூன்று பூட்டப்பிள்ளைகளும் கண்டிருக்கும் இவர்
திருமதி சண்முகானந்தம் நித்தியலட்சுமி(லண்டன்), செல்லத்தம்பி செல்வானந்தன் (குமார் சிங்கப்பூர்), மகேந்திரநாதன் வரலட்சுமி (லண்டன்) ஆகியோரின் தாயார் ஆவார்.
நூறகவையாள்
திருமதி.கணேசபாக்கியம்
————————————
மெளனமாய் புரட்டிப்
படித்த புத்தகமாய் உங்கள்
வயதை திரட்டித் தந்த
வாழ்க்கை ஓர் பொக்கிஷம்
சித்தத்தில் தேனாய்
சிறந்ததனை சேமித்த
சீவனுக்கு மார்க்கண்டேயனை
காத்த சிவனாய் கோணமலையான்
அருள்பலித்த ஆசீராய் நூறகவை
ஓசையின்றி
உயிரின் உணர்வாய்
உணரவைத்த
வாழ்க்கை சரித்திர அகராதி!
ஆனந்த வாழ்வுதனில்
துன்பங்கள் துயரங்கள்
கஷ்டங்கள் நஷ்டங்கள்
வலிகள் வேதனைகள்
ஆயிரம் ஆயிரம்
இன்ப துன்பங்களைச்
சுமந்து கடந்து
ஆண்டு அளவு நூறு காணும்
அருமை அம்மாச்சி
உள்ளத்தால் உயர்ந்து
எண்ணத்தில் நிலைத்து
வண்ணமாய் சிறந்துவிளைந்த
நூறாண்டைத் தொட்டு
வாழும் வரலாறான பாக்கியம்
கிட்டியதென்பது இறைவனால்
ஆசீர்வதிக்கப்பட்ட உய(யி)ர் பிறப்பு!
வாழ்க்கையை உணரவைக்கும்
தன்னடக்கமான உணர்வோடு
காலம் உள்ளளவும் இனிய நாளாக
வளரும் நாட்கள் யாவும்
சிறப்போடு மலரட்டும்
வாழ்த்துக்கள்!
நூறாவது அகவையில் கால் பதித்து நிற்கும் உங்கள் வெற்றியை நாமும் ஆனந்தமுடன் கொண்டாடுவோம்
இது பொன்று இன்னும் பல ஆண்டுகள் எம்மோடு. இணைத்து ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
“வல்வையம்பதி”
இரா.தனபாலன்
10/06/2022