கந்த சஷ்டி 2ம் நாள்- கப்பலுடையவர் கோவில்

0
474 views

முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் புகழ்பெற்ற திருவிழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. ஐப்பசி மாதம் கொண்டாப்படும் தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து, கந்த சஷ்டி விழாவை பக்த கோடிகள் பெரிதும் எதிர்நோக்குவர். கந்த சஷ்டியின் இறுதி நாளான 6 வது நாள் விழாவில் சூரபத்மனின் வதம் நடைபெறுகிறது.

பன்னிரு கரங்களில் வேலாயுதம், கோழிக் கொடி, அங்குசம், பாசம், வில்-அம்பு, கத்தி, கேடயம், கோடாரி, சூலம், கதை, சங்கம், சக்கரம் தாங்கி முருகப்பெருமான் போருக்குப் புறப்பட்டதெல்லாம் நன்மையைக் காக்கவன்றோ! ‘கந்தன் பாதம் கனவிலும் காக்கும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும் இந்த கந்த சஷ்டி நாளில் விரதமிருந்து அவனைத் தொழுதால் தீராத வினை எல்லாம் தீர்ந்து வாழ்வில் சேராத நன்மை எல்லாம் ஓடி வந்து சேரும்.

அந்த வகையில் வல்வெட்டித்துறை கப்பலுடையவர் கோவிலில் கந்த சஷ்டி 2ம் நாள் பக்திபூர்வமாக இன்று (06-11) நடைபெற்றது.

படங்கள்: கார்த்தி

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here