ஒத்திவைக்கப்பட்ட வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு எதிர்வரும் 22/09/2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் சுகாதார முறைப்படி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு நடைபெறவுள்ளது.
கடந்த 02-09-2021 இல் நடைபெற்ற அமர்வில் உறுப்பினர்களின் கோரம் போதாமையினால் ஒத்திவைக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.







