தீவிரம், அவசரம், இருள் என ஒவ்வொரு திசையிலும், அமெரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் இருந்தும் பெரிய சாம்பல் நிற இராணுவ போக்குவரத்து விமானங்கள் வானில் பறந்தபடி உள்ளன.
ஒவ்வொரு விமானத்தையும் நோக்கி ஆப்கானிஸ்தான் மக்களின் நீண்ட வரிசைகள் உள்ளன. வரிசைகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
அவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு சூட்கேஸ் மற்றும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே கொண்டு வர முடியும் என்று கூறப்பட்டுள்ளது –
இப்போது தலிபான்களால் கட்டுப்படுத்தப்படும் நாடு
அவர்கள் வெளியேறும் தங்களுடைய நாடு மட்டுமல்ல. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, 20 வருடங்களாக இளம் படித்த தலைமுறையினருக்காக அவர்கள் கட்டிய வாழ்க்கை, தாங்கள் நினைத்த கனவுகளையெல்லாம் விட்டுச் செல்கிறார்கள்.
இந்த காபுல் விமானநிலையத்திற்குள் 14,000 பேர் அமெரிக்க இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டு விமானங்களில் ஏறுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியே போவதற்காக காத்திருக்கிறார்கள் .ஆனால் எங்கே போவோம் ?எப்படியான வாழ்க்கை தமக்கு கிடைக்கும் என்ற புதிரான கேள்விகளுடன் விமானம் ஏறினால் போதும் என்று காத்திருக்கிறார்கள்.







