யாழ் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக வழங்கப்பட்ட 50,000 கொவிட் 19 சினோபார்ம் தடுப்பூசிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் திரு.க.மகேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற தடுப்பூசி வழங்கலில் இன்றுடன் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் அடுத்த வாரமளவில் கிடைக்கப்பெற்ற பின் அறிவிக்கப்பட்ட ஏனைய கிராம அலுவலக பிரிவுகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







