வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.குறித்த பகுதிகளில் காணப்படும் மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தின் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை, மாதகல் மற்றும் மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளிலும் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.








