மன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து

0
597 views

மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேருந்து, கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here