இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய TeqBall முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsul play ground) நடைபெற உள்ளது. யாழ் மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தன் அவர்களை இலங்கை ரெக் பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது.
இவரது ஏற்பாட்டில், இந் நிகழ்வுக்கு இலங்கை ரெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக் பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத் அவர்களும், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகளான திரு. ரஞ்சித் மற்றும் வைத்திய கலாநிதி. கணேசநாதன் ஆகியோரும் வருகை தந்து உபகரணங்களை கையளித்து, யாழ் மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.








