வடமாகாணத்தில் வல்வை மண்ணில் முதல்முறையாக அறிமுகமானது கால் மேசைப்பந்தாட்டம் (Teq Ball)

0
855 views

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசைப்பந்தாட்டம் (Teq Ball) முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsul play ground) அறிமுகப்படுத்தல் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

யாழ் மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்ட சிவா ஜீவிந்தன் அவர்களின் ஏற்பாட்டில், இந் நிகழ்வுக்கு இலங்கை ரெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக் பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத் அவர்களும், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகளான திரு. ரஞ்சித் மற்றும் வைத்திய கலாநிதி. கணேசநாதன், யாழ் மாநகரசபை முதல்வர் திரு.வி.மணிவண்ணன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். விளையாட்டு உபகரணங்களை கையளித்து உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

புகைப்படங்கள்- வே.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here