இவ் ஆண்டுக்கான பாடசாலைகள் நாளையதினம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதால் பெற்றோர், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமைகளை சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அவை வருமாறு,
பெற்றோர் கவனத்திற்கு பின்வரும் விடயங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவேண்டும்.
1. கல்லூரிக்கு வரும் போதும் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.(தவறுவோர் ஏனையோரின் நலன் கருதி வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்)
2.கல்லூரியினுள் வகுப்பறைக்குள் செல்லும்வரை முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
3. வகுப்பறையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் மீறினால் தனியாகவோ முழுவகுப்பாகவோ PHI தனிமைப்படுத்தப்படுவார்கள்.
4. வகுப்பறைக்கு வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியும் முகக்கவசமும் அவசியம்.
5. கல்லூரியினுள் நுழையும் போது கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும், தவறினால் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்.
6. முடியுமானவரை தேவையற்ற இடங்களை மேற்பரப்புக்களை தொடக்கூடாது.
7.தேவை என கருதும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
8.காய்ச்சல், தலையிடி, தடிமன், மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு இருந்தால் கல்லூரிக்கு வரவேண்டாம், வகுப்பாசிரியருக்கு உடன்தெரிவிக்க வேண்டும்.
9. கல்லூரிக்கு இயலுமானவரை சொந்த போக்குவரத்து மார்க்கங்கள் பயன்படுத்தவும்.
10.பொதுப்போக்குவரத்தைப்பயன்படுத்தும் போது இடைவெளியைக் பேணுவதுடன் வாகன இலக்கத்தை பதிந்து கொள்ளவும்.
11. எம்மைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் நண்பர்களையும் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்வோம்
12. எமது கவனயீனமும் அசட்டைத்தனமும் நாம் நோயாளியாக மாறாவிடினும் எமது அன்பிற்குரியவர்களுக்கு நோயைப்பரப்பும் காவியாகத்தொழிற்படும் சந்தர்ப்பம் அதிகம் என்பதை உணர்ந்துகொள்வோம்.







