தனிமைப்படுத்தலில் இருந்த 2400 குடும்பங்களுக்கு கொரோனா இடர் நிவாரணம் வழங்கி வைப்பு

0
535 views

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவி தொடர்பில் கருத்துரைக்கும் போது யாழ் மாவட்ட அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் கொரோனா இடர் நிவாரண உதவியின் கீழ் 26 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் 2400 குடும்பங்களுக்கு இன்று வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிவாரண பணிகள் இரண்டு கட்டங்களாக ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபா உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விவரங்கள் பிரதேச செயலாளரால் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டு மாவட்ட செயலகத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் நிதி மூலம் பெறப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு குறித்த நிவாரண உதவிகள் கட்டங்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தற்போதைய நிலையில் 1670 குடும்பங்கள் யாழ்மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here