வல்லையிலிருந்து வல்வெட்டித்துறைக்கு செல்லும் பிரதான வீதியை காப்பற் வீதியாக மாற்றுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
வல்லை உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறை சந்தி வரை செல்லும் வீதிக்கான அடிக்கல்லே வல்லைச் சந்தியில் நாட்டப்பட்டது. பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, பிரதி குழுக்களின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் நாட்டி வைத்தனர். இந்நிகழ்வில் கரவெட்டிப் பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், வீதி அதிகார சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.














