மந்திகை வைத்தியசாலைக்கு கிளினிக்கு வருவோருக்கான மருந்து வகைகளை எதிர் வரும் 11ஆம் திகதி முதல் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்கவுள்ளனர்.
வைத்தியசாலை நிர்வாகம் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு
எமது வைத்தியசாலையில் கிளினிக்குக்கு வருகை தருகின்ற அனைத்து பொதுமக்களுக்குமான ஒரு அன்பான வேண்டுகோள்:
கொரோணா பரம்பல் அதிகரித்துள்ள தற்போதைய நாட்டு நிலைமை காரணமாக நீங்கள் தேவையற்ற விதத்தில் வைத்தியசாலைக்கு வருவதைத் தவிர்த்து உங்களின் மாதாந்த கிளினிக்குக்கான மருந்துகளை எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து (11.11.2020) உங்களின் வீட்டுக்கு வந்து நேரடியாக விநியோகிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் அதற்குரிய ஆயத்தப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றோம். எனவே இப்பணியை இலகுபடுத்துவதற்கு வசதியாக தங்களிடமிருந்து உறுதியான சில தகவல்களை எதிர்பார்க்கின்றோம்.
அதாவது அனைத்து கிளினிக் நோயாளர்களும் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு (தொலைபேசி இலக்கம் : 0773180357 ) இன்றிலிருந்து தினந்தோறும் 24 மணிநேரமும் பின்வரும் தகவல்களை தொலைபேசியூடாக தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1.முழுப்பெயர்
2.வசிப்பிட முகவரி, தொலைபேசி இலக்கம்.
3.கிராமசேவையாளர் பிரிவின் பெயர், பிரதேச செயலர் பிரிவின் பெயர்
4.கிளினிக்கின் பெயரும், இலக்கமும்.
5.கிளினிக் வரவேண்டிய திகதி.
கிளினிக் வருகின்ற அனைவருக்கும் இத்தகவல் கிடைக்கும் வரை இச் செய்தியை இயன்றவரை பகிர்ந்து கொள்ளவும்.
இந்நடைமுறை திறம்பட நடைபெறுவதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.








