கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்படுவதை குறைக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்யக்கூடிய அதிகூடிய சிம் அட்டைகளின் எண்ணிக்கை ஐந்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஓர் செயற்பாடாகவே இது முன்னெடுக்கப்படுகின்றது. சிம் அடடைகளைக் கொள்வனவு செய்யும் போது வேறு நபர்களின் அடையாள அடடைகளைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இயங்கி வந்த அனைத்து தொலைபேசி நிறுவனங்களையும் பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








