ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒழுங்குபடுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலிற்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.
அனைத்து இடங்களும் முற்றாக முடங்கிக் காணப்படுகின்றன. பொது இடங்கள் வெறிச்சோடியும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டும் காட்சியளிக்கின்றன.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.
இதனையடுத்து வடமராட்சிபகுதியில் உள்ள நெல்லியடி பிரதான சந்தை , உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை சந்தைகள் இழுத்து மூடப்பட்டன. இப்பகுதியிலுள்ள மருந்துக்கடைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.
அரச போக்குவரத்து இடம்பெற்ற போதும் தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இடம்பெற்றது.
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருகைதந்த போதும் மாணவர் வரவு குறைவாக காணப்பட்டது.
அரச திணைக்களங்கள் இயங்கிய போதும் பொதுமக்கள் வரவு குறைவாக இருந்தது.இதே நேரம் அநேக பாடசாலைகளில் தரம் 10, 11 மாணவர்களுக்கான பரீட்சைகள் திட்டமிட்டவாறு இடம்பெற்றன. வழமைக்கு மாறாக முக்கிய சந்திகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் முடங்கிக் காணப்படும் பருத்தித்துறை, யாழ்ப்பாணம்




















