கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல்

0
524 views

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்ற வேளை, நேற்று மாலை இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப் பாட்டைப் பதிவு செய்துள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here