யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.45 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஸ்ரீதரன் பவானி (வயது-40) என்ற குடும்பப் பெண்ணே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
முகத்தை கறுப்புத் துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் கை, கால், உடம்பு என அனைத்து இடங்களிலும் வெட்டுக்காயங்களுடன் குறித்த பெண் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிக்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.








