கவிஞர் யாத்ரிகனின் ‘காலப்பழி’ கவிதைநூல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது . உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மண்டபத்தில் கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கவிஞர் கருணாகரன்இ தி. செல்வமனோகரன், இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். கரவெட்டி பிரதேச செயலர் ச.சிவசிறீ அவர்கள் நூலை வெளியிட்டு வைக்க யாத்ரிகனின் பெற்றோர் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டனர். யாத்ரிகன் ஏற்புரை நிகழ்த்தினார்.