வழமைக்கு திரும்பவுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்

0
566 views

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் செப்ரெம்பர் மாத இறுதிக்குள் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையினரின் அனுமதியை பெற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here