யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று 23.08.2020 பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 60 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொக்குவில் மற்றும் இளவாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








