வரலாற்றுச் சுவடுகள்: வல்வெட்டித்துறை நகர் பற்றி…
ஸ்ரீலங்கா சஞ்சிகையின் ஜூன் – ஜூலை 1957 இதழில் வல்வெட்டித்துறை பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுரையொன்றினை வித்துவான் வ.மு.கனகசுந்தரம் எழுதியிருக்கின்றார்.
இது போன்ற கலை, இலக்கிய , வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுரைகளை இலங்கை அரசின் தகவற் திணைக்களம் வெளியிட்ட ஸ்ரீலங்கா சஞ்சிகையின் பிரதிகளில் காணலாம். வல்வெட்டித்துறையில் நிலவிய கப்பல் கட்டும் தொழில் பற்றிய தகவல்களையும் மேற்படி கட்டுரை விபரிக்கின்றது.
வல்வெட்டித்துறை பற்றிய கட்டுரை வெளியான இதழுக்கான இணைய இணைப்பு: http://noolaham.net/project/185/18491/18491.pdf
குட்டித்தீவில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத்தமிழர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றியுள்ள சாதனைகள் பிரமிக்கத்தக்கவை.
அதிலொன்று இக்கப்பல் கட்டும் கலையில் அவர்களுடைய திறமை.
கீழுள்ள புகைப்படங்களிலொன்றில்.. பெரியதொரு கப்பல் வெள்ளோட்டத்துக்குத் தயாராகவுள்ள நிலை பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.













