யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மறைந்த மாமனிதர் அ.துரைராஜாவின் 26ஆவது நினைவுதினம் நேற்று 11.06.2020 உடுப்பிட்டி அ.மி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் முன்னாள் அதிபரும் வடமாகாண முன்னாள் உதவிகல்விப்பணிப்பாளருமான அ.அனந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மங்கள விளக்கினை கல்லூரியின் பிரதி அதிபர் எஸ்.விஜயகுமார் பழைய மாணவனும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உறுப்பினருமான பொ.வியாகேசு ஓய்வு நிலை ஆசிரியர்.க.தேவராசா மற்றும் கி.குணசிங்கம் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
மாமனிதரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் ஓய்வு நிலை அதிபர் கி.நடராசா மலர்மாலை அணிவித்தார்.தொடர்ந்து ஜிசிஈ உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலைபெற்ற யாழ் இந்துக்ல்லூரி மாணவன் ரா.யதுசன் மற்றும் உடுப்பிட்டி அமி கல்லூரியில் கணிதப்பிரிவில் முதல்நிலை பெற்ற க.கார்த்திகேயன் ஆகியோருக்கு கல்லூரி பழைய மாணவர்சங்கத்தினால் அன்பளிப்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து நினைவு பேருரையை முன்னைநாள் அதிபர் க.நடராசா நிகழ்த்தினர்.














