வல்வை உதயசூரியன் கழகம் நடாத்தும் வல்வையின் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடாத்தும், அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று தீருவில் மைதானத்தில் ஆரம்பமாகியது.
விலகல் முறையில் நடைபெறும் இச் சுற்றுத் தொடரில், இன்றைய முதலாவது போட்டியில், சுமார் 25 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய வல்வை ஒற்றுமை விளையாட்டுக் கழகம், தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினை எதிர்கொண்டிருந்தது.
முதல் பாதியில் இரு அணியினருக்கும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும் அவை அனைத்தும் கோல்களாக மாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருந்தன.
பின்னர் இரண்டாவது பாதியிலும் இந் நிலையே தொடர்ந்தது. போட்டி முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் தீருவில் அணியின் தாஸ் ஓர் கோலினை போட்டு தனது அணியினை முன்னிலைப் படுத்தினார். அந்த ஓர் கோலுடனேயே போட்டியும் முடிவடைந்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக தீருவில் அணியின் சிவகரன் தெரிவானார்.
நாளைய தினம் நடைபெறும் போட்டியில் றெயின்போ அணியினை எதிர்த்து சைனிங்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











