1ம், 3ம் இடங்களைப் பெற்றன மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை

0
897 views

பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான மாகாண மட்ட பூப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
17 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் மன்னார் பற்றிமா மகாவித்தியாலயமும் மன்னார் சித்திவிநாயகர் வித்தியாலயமும் மோதின. 3 தனிநபர் மற்றும் 2 இரட்டையர் ஆட்டங்களையும் கொண்ட இப் போட்டியில் பற்றிமா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜென்சி நாவலவை 21:14 21:18 எனவும் சி.சௌமியா நடாலை 21:18 21:15 எனவும் ரி.சௌமியா ஹரணியை 21:4 21:3 எனவும் வெற்றி கொண்டு 3:0என சம்பியனாகியது பற்றிமா மகா வித்தியாலயம். இதில் மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பெற்றது.


20 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தப்பாடசாலையும் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும் மோதின.
3 தனிநபர் 2 இரட்டையர்கள் கொண்ட இப்போட்டியில் மெடிஸ்த பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த ராகவி கஜனியை 21:08 21:09 எனவும் பிரசாந்தினி 21:19 21:14 எனவும் எழிலரசி ஏஞ்சலினை 21:14 21:19 எனவும் வெற்றி கொள்ளஉ3:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது மெதடிஸ்த பெண்கள் பாடசாலை.
இப்பிரிவில் மூன்றாமிடத்தை யாழ் இந்துமகளிர் கல்லூரி பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here