நீண்ட கால விடுமுறைக்குப் பின் மீண்டும் நாட்டிலுள்ள பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சங்காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று முதல் சாதாரணமாக இயங்கத் தொடங்கியுள்ளன.நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நான்கு கட்டமாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகள் எடுத்திருந்தது.
அதனடிப்படையில் இன்று பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இரண்டாம் கட்டமாக எதிர்வரும் 6ஆம் திகதி தரம் 5 தரம் 11 தரம் 13 ஆகிய வகுப்புக்களும், 20ஆம் திகதி தரம் 10 தரம் 12வரையான வகுப்புக்களும், 27 ஆம்திகதி முதல் தரம் 2,3,4,6,7,8,9 ஆகிய வகுப்புக்களும் ஆரம்பமாகவுள்ளன.







