வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கடற்கரை கபடிப் போட்டியின் இறுதியாட்டங்கள் வல்வை ரேவடி கடற்கரையில் இடம் பெற்றது.
இதில் முதலில் இடம் பெற்ற பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் யாழ் மாவட்ட அணியும் கிளிநொச்சி மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் அபாரமாக விளையாடிய யாழ் மாவட்டட அணி 53:36 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது. இதில் மூன்றாமிடத்தை வவுனியா மாவட்ட அணி பெற்றது.

தொர்ந்து இடம்பெற்ற ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் யாழ் மாவட்ட அணியும் வவுனியா மாவட்ட அணியும் மோதின இதில் 46:24 என்ற புள்ளிகளினைப் பெற்று யாழ் மாவட்ட அணி சம்பியனாகியது. மூன்றாமிடத்தை மன்னார் மாவட்ட அணி பெற்றது.









