வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் நடாத்தும் 5 ஓவர்கள் 6 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடர் இன்று கழுகுகள் மைதானத்தில் நடைபெற்றது.
இச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரேவடி எதிர் றெயின்போ அணிகள் மோதின…
முதலில் துடுப்பெடுத்தாடிய ரேவடி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர் முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணியானது 3.5 பந்துப் பரிமாற்றத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாகியது..
ரேவடி அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது..
வாழ்த்துக்கள் இரு அணியினர்க்கும்..









