இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது வல்வை வி.கழக மகளிர் அணி

0
643 views

பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் இடம்பெறும் விளையாட்டு விழாவிற்கான தெரிவு விளையாட்டுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது 01/03/2019 நேற்யை தினம் பருத்தித்துறை மாதனை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. அரையிறுதிப் போட்டியில் நெடியகாடு பெண்கள் அணியினை 24:26, 25:23, 25:15 புள்ளிகளைப் பெற்று 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டது வல்வை விளையாட்டுக் கழக பெண்கள் அணி.

தொடர்ந்து பருத்தித்துறை யுனைட்டைட் அணியுடனான இறுதியாட்டத்தில் மிகுநத பலப்பரீட்சையை எதிர்கொண்டு 25:21,25:19 என்ற செற்கணக்கில் வல்வை பெண்கள் அணியானது சிறிய இடைவெளியில் வெற்றி வாய்ப்பினை நழுவ விட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது . தற்போது தொடர்ச்சியாக வல்வை வீராங்கனைகள் போட்டிகளில் மயிரிழையில் இறுதிபோட்டியின் வெற்றிவாய்ப்பினை நழுவ விடுகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் அவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு போட்டிகளில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.
அவர்களின் பயிற்றுவிப்பாளருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here