வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத்தில் 16 வயதுப்பிரிவில் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி.

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் உடுப்பிட்டி அமி கல்லூரியும் மோதின. மூன்று செற் கொண்ட இச் சுற்றுப்போட்டியில் முதல் செற்றை 25:21 என்ற புள்ளிகள் அடிப்படையில் தொண்டைமனாறு வீ.ம.வி வெற்றி கொண்டது.
அடுத்த செற்றை 25:22 என்ற புள்ளி அடிப்படையில் உடுப்பிட்டி. மி கல்லூரி வெற்றி கொண்டு ஆட்டத்தை சமப்படுத்தியது.
இதனை அடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான இறுதி செற்றை தொண்டைமனாறு வீ. மவி 25:20. என்ற புள்ளி பெற்று 2:1 என்ற அடிப்படையில் சம்பியனாகியது. மூன்றாமிடத்தை வல்வெட்டி இ.த. க பாடசாலை பெற்றது.








