வல்வை பூர்வீகம் Dr.ராகமி ஜபிசியின் நாட்டியதாரகை இறுதிப்போட்டியில் …
ஜபிசி தொலைக்காட்சியால் கடந்த 12 மாதங்களாக ஜரோப்பாவில் இருக்கின்ற பரதநாட்டிய கலைஞர்களில் இருந்து நாட்டியதாரகையை தெரிவு செய்யும் போட்டி பல கட்டங்களாக நடாத்தப்பட்டு தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர்.
ஜரோப்பாவில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட போட்டியின் இறுதிப்போட்டியில் பங்குபற்றுவதற்கு ஜந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இறுதிப்போட்டிக்கு தெரிவான ஜந்து பேரில் ஒருவராக வல்வெட்டித்துறையை பூர்வீகமாக கொண்ட DR.ராகமி ராஜலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறுதிப்போட்டி 08.12.2018 அன்று சுவிட்சலாந்தில் உள்ள Fribourg நகரில் நடைபெறவுள்ளது.
டென்மார்க்கில் தாய், தந்தை, சகோதரனுடன் வாழ்ந்து வரும் ராகமி டென்மார்க்கில் உள்ள கோல்டிங் (Kolding) நகரில் இருக்கும் வைத்தியசாலையில் வைத்தியராக பணிபுரிந்து வருகின்றார். வைத்தியராக பணிபுரிந்து கொண்டு பரதநாட்டிய பயிற்சியையும் தொடர்ந்து வருகின்றார்
வல்வெட்டித்துறையை சேர்ந்த ராஜலிங்கம் சிவரஞ்சினி தம்பதிகளின் மகளான ராகமி, முத்துலிங்கம் (சின்னக்கண்டு மேத்திரியார்) மாணிக்கம் அம்மா மற்றும் இராசேந்திரம் சிவராணி(பன்னீர்) ஆகியோரின் பேத்தி ஆவார்.










