“மறு அறிவித்தல் வரும் வரை கூட்டக் கூடாது ” : ரெஜினோல்ட் குரே

0
650 views

வடக்கு மாகாண அமைச்சரவையினை எனது மறு அறிவித்தல் வரும் வரை கூட்டக் கூடாது என வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பா.டெனீஸ்வரனும் ஓர் சட்டப்படியான அமைச்சராவார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த யூன் மாதம் 29ம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் அமைச்சர் வாரியக் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசணை வழங்குமாறு பிரதம செயலாளர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடித்த்திற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் இன்றைய நிலையில் வடக்கு மாகாண சபையில் 6 அமைச்சர்கள் இருப்பதனைக் கருத்தில்கொண்டு அமைச்சர் வாரியக் கூட்ட விடயத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டாம் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனுக்கு கடந்த 12ம் திகதிய கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போதைய சூழலில் அமைச்சர் வாரியக் கூட்டம் எவையும் இடம்பெறுவதற்கான சாத்தியம் அற்ற நிலமை காணப்படுவதனால் வடக்கு மாகாண சபையின் ஊடாக முன்னெடுத்த பல திட்டங்களில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here