20 வயது பெண்களுக்கான ஆட்டத்தில் சம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை

0
666 views

வடமாகாணப் பாடசாலைகளுக்கான பூப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்களுக்கான ஆட்டத்தில் சம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை.
குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
இதன் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை பெண்கள் உயர்தரப்பாடசாலையும் யாழ் இந்து மகளிர்கல்லூரியும் மோதின.
மூன்று தனிநபர் ஆட்டத்தையும் இரண்டு இரட்டையர் ஆட்டத்தையும் கொண்ட இப்போட்டியயில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்ளையும்மெதடிஸ்த பெண்கள் கல்லூரியைச்சேர்ந்த ராகவி மற்றும் சாருகா ஆகியோர் இந்து மகளிரைச் சேர்ந்த தமிழினி மற்றும் நிஷாந்தினி ஆகியோரை 2:0 2:1 என்ற செற்கணக்கில் வெற்றி கொள்ள மூன்றாவது போட்டியை மெதடிஸின் பிரசாந்தி 0:2 என்ற அடிப்படையில் இந்து மகளிரின் கம்சாயினியிடம் பறிகொடுத்தார்
அடுத்து இடம்பெற்ற இரட்டையர் ஆட்டத்தில் மெதடிஸின் பவித்திரா சாருகா இணை இந்து மகளிரின் கம்சாயினி தமிழினி இணையை 2:0 என்ற நேர் செற்றில் வெற்றி கொள்ள 3:1 என்ற அடிப்படையில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை சம்பியனாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here