வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட எறி பந்தாட்ட போட்டியில் 17 வயது ஆண்களுக்கான எறிபந்தில் இவ்வருடச் சம்பியனாகியது துணுக்காய் கோட்டை கட்டியகுளம் மகா வித்தியாலயம்.

குறித்த போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 17 வயது ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் துணுக்காய் கோட்டை கட்டியகுளம் மகா வித்தியாலயமும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக் கொண்ட இச் சுற்றுப்போட்டியில் முதல் செற்றை 25:19. என கோட்டை கட்டியகுளம் மகா வித்தியாலம். கைப்பற்ற அடுத்த. செற்றை 25:22 என்ற புள்ளிகளைப் பெற்று கொக்குவில் இந்துக்கல்லூரி கைப்பற்றியது. தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான மூன்றாவது செற்றை 25:10 என கோட்டை கட்டிய. குளம் மகா வித்தியாலம் வெற்றி பெற்று 2:1 செற் கணக்கில் வென்று சம்பியனாகியது கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம்.
இதில் மூன்றாமிடத்தை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி பெற்றது








