வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே அணிக்கு 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்தி வந்தது…
அவ்வகையில் 02.04.2018 அன்று இடம்பெற்ற இரண்டாவது இறுதி ஆட்டத்தில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகமானது மோதியது… 

ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத காரணத்தினால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவரால் வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 5-4 என்ற கோல்கணக்கில் இளங்கதிர் விளையாட்டுக்கழகமானது வெற்றி பெற்று சம்பியனாகியது….
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இளங்கதிர் அணியைச்சேர்ந்த மதுசாந் , இச்சுற்றுத்தொடரின் சிறந்த கோல் காப்பாளராக அதே அணியைச்சேர்ந்த விஜிகரன் மற்றும் தொடராட்ட நாயகனாக சைனிங்ஸ் அணியின் தீபனும் தெரிவு செய்யப்பட்டனர்…
இவ்வெற்றிக்கிண்ணமானது நடப்பாண்டில் இளங்கதிர் அணி பெற்றுக்கொண்ட முதலாவது வெற்றிக்கிண்ணமாகும் ….











