கரவெட்டிப் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கவேலாயுதம் ஐங்கரனும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ச. இராமநாதனும் பிரேரிக்கப்பட்டு இருவர் மட்டும் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என்ற வாக்கெடுப்பில் 11 பேர் பகிரங்க வாக்கெடுப்பும் 10 பேர் இரகசிய வாக்கெடுப்பும் கோரியதோடு 10 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பு என ஆணையாளர் தீர்மானித்தார்.
இதன்போது இராமநாதன் குறித்த வாக்கெடுப்பினையும் இரகசியமாகவே நடாத்தப்பட வேண்டும் எனக்கோரியபோது சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என ஆணையாளர் தெரிவித்தார். அவ்வாறானால் சட்டத்தை நாடவுள்ளதாக இராமநாதன் குறிப்பிட்டப்போது அது உங்கள் உரிமை என ஆணையாளர் தெரிவித்து பகிரங்க வாக்கெடுப்பினை நடாத்தினார்.
இதில் கூட்டமைப்பின் வேட்பாளர் 11 ஆசனங்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் 10 வாக்குகளையும் பெற்றனர்.
இதன் பிரகாரம் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐங்கரன் தவிசாளராகத் தேர்வு செய்யப்கய்யப்பட்டார்.
31 உறுப்பினர்களைக்கொண்ட கரவெட்டிப் பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 7 , தமிழ்க் காங்கிரஸ் 7 , ஈ. பீ.டீ.பீ 3 , ஐ.தே.கட்சி 2 , தமிழர் விடுதலைக் கூட்டணி 3 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.